இதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் இந்த 3 பொருட்களை மறந்தும் தானம் கொடுக்கவே கூடாது!
ஒருவரின் குறையை மற்றொருவர் போக்க வேண்டும் என்பதற்காகத்தான் தானம் கொடுக்கும் முறை உருவாக்கப்பட்டது. மற்றவர்களுக்கு தானம் அளிப்பது நமக்கு மன நிம்மதி, புகழ் ஆகியவற்றை தேடித்தரும்.
குறிப்பாக அன்னதானம் செய்வதால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அன்னதானம் இடுபவரை வெய்யில் வறுத்தாது. வறுமை தீண்டாது. இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும்.
அதே வேளையில் சில பொருட்களை நாம் எப்போதும் தானம் அளிக்கவே கூடாது.மீறி அதனை தானமாக கொடுத்தால் நமக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படும். என்னென்ன பொருட்களை தானம் அளிக்கக்கூடாது என்பதை இங்கே பார்க்கலாம்.