சுகாதார நடைமுறையை பின்பற்றி யாழ்ப்பாண மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சைகள் ஆரம்பம் !

share this..

யாழ்ப்பாண மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சைகள் சுகாதார நடைமுறையை பின்பற்றி ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றதுயாழ்ப்பாண மாவட்டத்தில்8410 மாணவர்கள் தரம் 5 புலமைப் பரிசில் தோற்றுகின்றனர்.

யாழ் மாவட்டத்தில் 2020 புலமைப் பரிசில் பரீட்சையில் தீவகம் யாழ்ப்பாணம் தென்மராட்சி வலயத்திலு 3540மாணவர்களும் வடமராட்சி ,வலிகாமம் வலயத்தில் 4870,மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்

94 பரீட்சை நிலையங்களில் 22இணைப்பு நிலையங்களின் கீழ் பரீட்சைகள் ஆரம்பமாகி இடம்பெறுகிறது. சுகாதார நடைமுறைக்கு அமைவாக பரீட்சை மண்டபங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதோடு
மாணவர்கள் சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி சமூக இடைவெளி பேணி முக கவசம் அணிந்து பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகளை வடக்கு மாகாண கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது

இன்று இடம்பெறும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 18 ஆயிரத்து 387 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதோடு 212 பரீட்சை மண்டபங்களில் பரீட்சை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

share this..

Leave a Reply

Your email address will not be published.