பெண் உத்தியோகஸ்தருக்கு தொலைபேசியில் பாலியல் தொல்லை .? வடக்கு கல்வி அதிகாரி அதிரடியாகக் கைது..!!

share this..

வடமாகாண மும்மொழி கற்கை நிலையத்தில் பணியாற்றும் அதிகாரியொருவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமாகாண மும்மொழி கற்கை நிலையத்தின் உயரதிகாரியொருவர் தனக்கு தொலைபேசி வழியாக பாலியல் தொல்லை தருவதாக, அங்கு பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் வடமாகாண கல்வியமைச்சில், பெண் உத்தியோகத்தர் தரப்பினால் முறைப்பாடு செய்யப்பட்டது. எனினும், வடக்கு அதிகாரிகள் அதை கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து, அவர்கள் செய்த மேன் முறையீடுகளையடுத்து, நேற்று மாலை குறிப்பிட்ட அதிகாரி பொலிசாரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

அவரை பிணையில் நீதிமன்றம் விடுவித்துள்ளதுடன், விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
பொலிசார் இது குறித்த விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

share this..

Leave a Reply

Your email address will not be published.