சோடா புட்டி கண்ணாடிக்கு GOOD BYE சொல்லுங்க…! கண் பார்வை கோளாறுக்கு இது மட்டும் போதும்..!

share this..

கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் முன் அமர்ந்து நீண்டநேரம் வேலை செய்வது மட்டுமல்லாமல், மீதி நேரத்தில் செல் ஃபோனை பார்த்துக்கொண்டிருப்பதால், கண் பார்வையில் குறைபாடு ஏற்படுகிறது.

கடந்த பத்து வருடங்களில் கண் கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

கண்ணாடி போடுவது ஸ்டைல் என்று நினைத்துக் கொள்பவர்களும் உண்டு. அதுவே நாளாக நாளாக பெரிய தலைவலியாகிவிடும். மோசமான உணவுப் பழக்கத்தாலும், நாம் சாப்பிடும் உணவில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல், கண் ஆரோக்கியம் பாதிப்படைகிறது.

ஆகையால், சேதம் அதிகம் ஆகாமல் பார்த்துக் கொள்ள சில குறிப்புகள் கண் பார்வையில் பிரச்சனை உள்ளவர்களுக்கான வீட்டுத் தீர்வு

செய்முறை1: குங்குமப்பூ + தண்ணீர் + தேன்

ஒரு கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வையுங்கள். அடுப்பை அனைத்து பின் குங்குமப்பூ சேர்த்து சிறிது நேரம் மூடி வையுங்கள். பிறகு வடித்து, தேன் கலந்து பருகினால் போதும்.

நன்மைகள்: இந்த தேநீரை பகலில் ஒரு வேளை அருந்தலாம். பார்வையை மேன்படுத்துவது மட்டுமல்லாமல், உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கும். ஆர்தரைட்டிஸ் நோயினால் ஏற்படும் வலியை குணப்படுத்தும். ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரிக்கும்(improve).

செய்முறை 2: சோம்பு + பாதாம்

சோம்பு, பாதாம் இரண்டையும் சரிசமமாக எடுத்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சக்கரை சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த மூன்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பவுடர் போல அரைத்துக்கொள்ளுங்கள். இரவு தூங்குவதற்குமுன், பாலில் ஒரு தேக்கரண்டி இந்த பவுடரைக் கலந்து பருகுங்கள்.

நன்மைகள்: கிட்டப் பார்வை, தூரப்பார்வை, கேட்ராக்ட் பிரச்சனை எதுவாக இருந்தாலும், 40 நாட்கள் இந்த செய்முறையை பின்பற்றி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

share this..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *