” நாங்க சாதி பாத்து காதலிக்கல” வீட்ல சொன்னம் ஒத்துக்கல இளம் தம்பதியினர் எடுத்த அ_திரடி முடிவு

share this..

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வீரன்பட்டை பகுதியை சார்ந்தவர் லிங்க சுப்பிரமணியம் (வயது 23). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடன் கல்லூரி பயின்று வந்த மாணவி ஹேமலதா.

இவர்கள் இருவருக்கும் இடையே முதலில் நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது பின்னாளில் இவர்களுக்குள் காதலாக மாறவே, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

பின்னர் திருமணம் செய்ய முடிவு செய்து, திருமணத்திற்காக பெண்ணின் வீட்டை அணுகுகையில், பெண் வீட்டார் சார்பாக திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, காதல் ஜோடிகள் இருவரும் அம்பத்கார் மணிமண்டபத்தில் பவுத்த முறைப்படி ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமண நிகழ்வில் மணமகன் வீட்டார் மட்டும் பங்கேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் லிங்கு சுப்பிரமணியமும், ஹேமலதாவும் கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் பௌத்த முறையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர்.

மூடநம்பிக்கை மற்றும் சடங்கு சம்பிரதாயம் இன்றி இருவரும் மாலை மாற்றிக் கொண்டு, தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். இதில் மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பங்கேற்றனர். சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடியை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

share this..

Leave a Reply

Your email address will not be published.