வாழைப்பழம் போதும் ஒரே வாரத்தில் முகப்பரு, கரும்புள்ளி தழும்பு மறைந்துவிடும்

share this..

முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க வேண்டுமா? அதற்கு 5 ரூபாய் வாழைப்பழம் போதும்!

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், தழும்புகள் மற்றும் பருக்கள் எளிதில் போக வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் வாழைப்பழத்தை முகத்திற்கு அப்ளை செய்யலாம்.

இதனால் பருக்களினால் ஏற்பட்ட கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் ஆகியவற்றை தடுக்கவும் வாழைப்பழம் பெரிதளவில் உதவி புரிகின்றது.

இதற்காக நீங்கள் அதிக நேரமோ, பணமோ செலவிடத் தேவையில்லை. ஒற்றை வாழைப்பழம் முகத்தில் உள்ள பல சரும பிரச்சனைகளை தீர்த்து விடும்.

வழிமுறை 1 :

வாழைப்பழத்தை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்பு அதனுடன் 1 ஸ்பூன் மைதா மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும். அடுத்து அதனுடன் கால் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

முகத்தை சுத்தமான நீரில் கழுவி விட்டு இந்த கலவையை அப்ளை செய்யலாம். ஒரு அரை மணி நேரம் வரை காத்திருங்கள். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிக் கொள்ளவும்.

இதை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் முகம் பளிச்சென்று மாறிவிடும். தொடர்ந்து ஒரு மாதம் செய்யுங்கள் உங்கள் முகத்திற்கு நல்ல பலன் கிடைக்கும். கஸ்தூரி மஞ்சள் முகத்தை பளிச்சிட செய்யும். வாழைப்பழம் உங்கள் முகத்திற்கு நிறத்தை கொடுக்கும்.
வழிமுறை 2 :

வறண்ட சருமம், முகப்பருக்கள், அம்மை தழும்புகள், கரும்புள்ளி போன்ற பிரச்சனை போக வேண்டுமென்றால் முகத்திற்கு இதை பாலோ செய்யுங்கள்.

அரை வாழைப்பழத்துடன் 2 தேக்கரண்டி தேன் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். பின்பு இதை முகத்திற்கு தடவி அரைமணிநேரம் வரை காத்திருக்கவும்.

பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். இதே போல வாரத்திற்கு இருமுறை, ஒருமாதம் தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்துவிடும்

வழிமுறை 3 :

கோடை காலங்களில் ஏற்படும் சரும வளர்ச்சி பிரச்சனை மற்றும் முகத்தில் ஏற்படும் எண்ணெய் வழிதல் போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய வாழைப் பழம் பெரிதளவில் உதவி புரிகின்றது வாழைப்பழத்துடன் 3 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்பு உங்கள் முகத்தை சுத்தமாக கழுவிக் கொண்டு இதை அப்ளை செய்யலாம்.

இதை வாரத்திற்கு ஒருமுறை செய்தால் சருமத்தில் உள்ள வறட்சி மறைந்து சருமம் மின்ன ஆரம்பித்துவிடும். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் அப்படியே இருக்க வேண்டும்.

பின்பு முகத்தை கழுவிக் கொள்ளலாம். இதை தொடர்ந்து ஒருமாதம் செய்து வந்தால் முகத்தில் உள்ள சருமத்தில் வறட்சியே இருக்காது. அதுமட்டுமில்லாமல் எண்ணெய் பசை உள்ளவர்கள் சருமமும் பளிச்சென்று இருக்கும்.குறிப்பாக கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்கள் மறைய இது நல்ல ஒரு தீர்வாக இருக்கும்.

share this..

Leave a Reply

Your email address will not be published.