இலங்கையில் புதிதாக கைத் தொலைபேசியொன்றை வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் மிக முக்கிய அறிவித்தல்.!!

share this..

சிம் அட்டையினால் செயற்படும் தொலைத்தொடர்பு உபகரணங்களை கொள்வனவு செய்யும் போது அனுமதிப்பத்திர உரிமத்தை கொண்டுள்ள விற்பனையாளர்களிடமிருந்தே அவற்றை வாங்குமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன் புதிய கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் போது, குறித்த தொலைபேசி இலங்கையில் பதிவு செய்துகொள்ளப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்கான முறைமையொன்றும்

அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.குறுந்தகவலொன்றின் ஊடாக குறித்த தொலைபேசி தொடர்பில் அறிந்துகொள்ள முடியும்.

இதன்படி, கையடக்கத் தொலைபேசியிலுள்ள இமி இலக்கத்தை 1909 என்ற இலக்கத்திற்கு அனுப்புவதன் ஊடாக, அந்த தொலைபேசியின் பதிவு தொடர்பான தகவல்களை பயன்பாட்டாளருக்கு அறிந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறுந்தகவல் அனுப்பும் விதம் :- IMEI<15DIGIT IMEI>SEND SMS TO 1909
குறுந்தகவல் அனுப்பும் விதம் :- IMEI<15DIGIT IMEI>SEND SMS TO 1909

share this..

Leave a Reply

Your email address will not be published.