இந்த டீயை ஒருமுறை குடித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்கும் ! நீங்களும் ட்ரை பண்ணுங்க ….

share this..

சளி, இருமல், தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு என்பது அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று. இது குளிர்காலம் கோடைகாலம் என்று பாகுபாடில்லாமல் எந்த சமயத்தில் வேண்டுமானலும் ஏற்படும்.

இப்படிப்பட்ட இந்த பிரச்சனையை எளிய முறையில் போக்க மருத்துவ குணம் நிறைந்த இந்த டீ பெரிதும் உதவுகிறது.

இந்த டீயை தயாரிக்க தேவையான பொருள்கள் என்னவென்றும் எப்படி தயாரிப்பது என்றும் இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

  1. வரமல்லி – 1 ஸ்பூன்
  2. மிளகு – 1 ஸ்பூன்
  3. கிராம்பு – 2
  4. ஏலக்காய் – 2
  5. இஞ்சி- சிறிய துண்டு

புதினா இலை அல்லது துளசி இலைகள் – 4

செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் சிறிய உரல் இருந்தால் அதில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக டீ போடும் பாத்திரத்தில், 1 கப் அளவு தண்ணீரை வைத்துக் கொள்ளுங்கள்.

தண்ணீர் நன்றாக கொதித்ததும் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் பொடி, 2 ஸ்பூன் அளவு டீத்தூள், 2 ஸ்பூன் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் போட்டு கொதிக்க விடுங்கள்.

நீங்கள் கொதிக்க வைத்த 1 கப் தண்ணீர், 1/2 கப் அளவு தண்ணீராகும் வரை நன்கு சுண்ட விட வேண்டும்.

அதன்பின் இந்த கசாயத்தை ஒரு சிறிய பாத்திரத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

பின்பு 1 1/2 கப் காய்ச்சிய சூடான பாலை எடுத்து, கசாய தண்ணீரோடு நன்கு கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுட சுட மருத்துவ குணங்கள் நிறைந்த டீ தயார். இந்த டீயை குடித்தால் உடல் அசதி, சளி, இருமல் போன்றவை நீங்கி சுறுசுறுப்பாக வாழலாம்.

source:- https://www.ziotamil.in/there-are-so-many-benefits-to-drinking-this-tea-once/

share this..

Leave a Reply

Your email address will not be published.