வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்..!!

share this..

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்குவதற்கான காலத்தை ஏழு நாட்களாக குறைப்பது தொடர்பிலேயே இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்குள்ளாகும் போது எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் இன்று நடைபெறும் கொவட்-19 பரவலை தடுப்பதற்கான குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதற்கான கோரிக்கையினை இராணுவத் தளபதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் முன்வைத்துள்ளார்.

share this..

Leave a Reply

Your email address will not be published.