உங்கள் காலில் ஆணியா? இதனை போக்க எளிய மருத்துவம்

share this..

காலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பம் காரணமாகவும், அசுத்தமான இடங்களில் காணப்படுகின்ற கிருமிகளாலும் காலில் ஆணி நோய் ஏற்படுகிறது.
பெரியவர்கள், சிறியவர்கள் என பலரும் இந்த ஆணி நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.


காலில் ஏற்படும் ஆணி நோயானது, காலில் ஆணி குத்தினால் வலி எப்படி ஏற்படுமோ அதே போன்று இருக்கும்.

வேப்பிலை:
வேப்பிலை இலை பசை மற்றும் குப்பைமேனி இலை பசை இவற்றுடன் சிறிதளவு மஞ்சள் பொடியை நன்றாக கலந்து இந்த பசையை கால் ஆணி உள்ள இடத்தில் இரவு முழுவதும் கட்டி வைத்தால் கால் ஆணி பிரச்சினை சரியாகும். வேப்பிலையும், குப்பைமேனியும் மருத்துவ குணங்கள் கொண்டவையாகும்.

சித்திரமூலம்:
சித்திரமூலம் வேர்ப்பட்டையை ஒரு புளியம் வித்து அளவு எடுத்து அரைத்து, அதனை தூங்க போவதற்கு முன்னால் கால் ஆணி மேல் பூசி வந்தால் 3 நாட்களில் குணம் கிடைக்கும். இதனை செய்யும்பொழுது சிலருக்கு அவ்விடத்தில் புண் உண்டாகும். அப்படி புண் வந்தால் விளக்கெண்ணெயில் 1 கரண்டி எடுத்து அதனுடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைத்து, புண் வந்த இடத்தில் பூசினால் புண்ணும் ஆறி, கால் ஆணியும் காணாமல் போய்விடும்.

கடுகு:
ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெயை எடுத்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெயில் வறுத்து பொடி செய்த கடுகு, மஞ்சள் பொடி இவற்றை சேர்த்து தைல பதத்தில் காய்ச்சி எடுக்க வேண்டும். இதை ஆற வைத்து வடிகட்டி, இரவு நேரத்தில் தூங்க போகுமுன் கால்களை சுத்தப்படுத்தி விட்டு இந்த தைலத்தை தடவினால் கால் ஆணி குணமாகும்.

மற்றும் மஞ்சள் துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு, வசம்பு ஒரு துண்டு இவற்றை சேர்த்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள்மீது 21 நாட்கள் தொடர்ந்து பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.

அதிகமாக உடலில் வலு இருந்தால், அதனால் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாகவும் கால் ஆணி ஏற்படுகிறது.

அளவு சரியில்லாத செருப்பு அணிவதாலும் ‘காலாணி’ ஏற்படுகிறது.

அதிக நேரம் நிற்பவர்களுக்கும் கால் ஆணி ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அப்படியாக அதிக நேரம் நிற்பவர்கள் மென்மையான காலணிகளை அணிய வேண்டும். அப்படி அணியும் போது காலின் அழுத்தம் குறைகிறது.

இதுபோல் செய்து வந்தால் கால் ஆணிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ஏதேனும் ஒரு பொருள் காலில் குத்தி கொண்டால் அதை நீக்காமல் விடும் பொழுது, தோல் படலம் வளர்ந்து கெட்டியாகி விடுகிறது. இதை தவிர்க்க காலணி இல்லாமல் வெளியில் செல்லக் கூடாது. காலில் ஏதாவது குத்தினால் உடனே அதை நீக்கி, அவ்விடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

share this..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *