இலங்கை பொலிஸ்‌ சேவையில்‌ விசேட அதிரடிப்‌படை பயிலுநர்‌ பொலிஸ்‌ கொஸ்தாபல்‌ சாரதி பதவி நேரடி ஆட்சேர்ப்பதற்காக விண்ணப்பங்கள்‌ கோரப்படுகின்றன.

share this..

Police Constables for Special Task Force – Sri Lanka Police. STF Police Constable Application Download. STF Vacancies. Sri Lanka Police Job Vacancies.

பொலிஸ்‌ கொஸ்தாபல்‌ சாரதி பதவி – விசேட அதிரடிப்படை

இலங்கை பொலிஸ்‌ சேவையில்‌ விசேட அதிரடிப்‌படை பயிலுநர்‌ பொலிஸ்‌ கொஸ்தாபல்‌ சாரதி பதவி நேரடி ஆட்சேர்ப்பதற்காக இலங்கைப்‌ பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள்‌ கோரப்படுகின்றன.

தேவையான அடிப்படைத்‌ தகைமைகள்‌ :

வயதெல்லை: – வர்த்தமானி அறிவித்தலின்‌ பிரகாரம்‌ விண்ணப்பப்படி வம்‌ ஏற்றுக்கொள்ளப்படும்‌ இறுதித்‌தினத்தன்று வயது 18-25 இற்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும்‌.

கல்வித்‌ தகைமைகள்‌:
க.பொ.த. சா. த.) பரீட்சையில்‌ கணிதம்‌ மற்றும்‌ ஊடக மொழியுட்பட இரு தடவைக்கு மேற்படாத தடவையில்‌ இரு பாடங்களில்‌ திறமைச்‌ சித்தியுடன்‌ 06 பாடங்களில்‌ சித்தியெய்தியிருத்தல்‌ வேண்டும்‌.

தொழில்சார்‌ தகைமைகள்‌ :

இலகுவாகனங்களுக்கும்‌ கனரக வாகனங்களுக்குமான செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம்‌.
குறிப்பு 1- மோட்டார்‌ திருத்தும்‌ அனுபவம்‌ அல்லது மோட்டார்‌ எந்திரவியல்‌ அல்லது வாகனம்‌ செலுத்தும்‌ நீண்டகால அனுபவம்‌ உள்ளவர்களுக்கு முன்னுரிமை அழிக்கப்படும்‌.

Closing Date : 2021-06-30

share this..

Leave a Reply

Your email address will not be published.