பழைய ரூபாய் நோட்டு இருக்கா? நீங்க ஆயிரங்களில் சம்பாதிக்கலாம்!

0 Shares

பழைய பொருட்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். அதுவும் பழைய நாணயங்களுக்கும் நோட்டுகளுக்கும் பல்வேறு வலைதளங்களில் அதிக டிமாண்ட் இருக்கிறது. அவற்றின் அசல் மதிப்பு மிக மிகக் குறைவு என்றாலும் அதற்குக் கிடைப்பதோ பெரிய தொகை. ஆனால் அந்த நாணயங்கள் அரிய வகையாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்டம் இருந்தால் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் நீங்கள் விற்பதன் மூலம் கோடீஸ்வரர் கூட ஆகலாம். இதுபோன்ற வாய்ப்பு சமீப நாட்களில் நிறையப் பேருக்குக் கிடைத்துள்ளது.

நீங்கள் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் சேகரித்து வைப்பவராக இருந்தால் உங்களுக்கு அந்த வாய்ப்பு உள்ளது. இவற்றை விற்பனை செய்ய நீங்கள் எங்கும் அலையத் தேவையில்லை.

ஆன்லைன் மூலமாக அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே விற்கலாம். இந்தியா மார்ட், காயின் பஜார், குயிக்கர், பின்ரெஸ்ட், ஓஎல்எக்ஸ் போன்ற வலைதளங்களில் இவற்றை நீங்கள் விற்பனை செய்ய முடியும்.

5 ரூபாய் நோட்டுக்கு ரூ.30,000!

பழைய 5 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், கண் இமைக்கும் நேரத்தில் மிகச் சுலபமாக 30,000 ரூபாய் சம்பாதிக்கலாம். இந்த 5 ரூபாய் நோட்டில் சில தனித்தன்மைகள் உள்ளன. இந்த நோட்டில் டிராக்டர் படம் இடம்பெற்றிருக்க வேண்டும். அதோடு 786 சீரியல் நம்பர் அதில் இருக்க வேண்டும். உங்களிடம் இந்த நோட்டு இருந்தால், அதை Coinbazzar வெப்சைட்டில் விற்பனை செய்யலாம்.

ஒரு ரூபாய் நோட்டுக்கு ரூ.45,000!

உங்களிடம் பழைய 1 ரூபாய் நோட்டு இருந்தால், வீட்டில் உட்கார்ந்து கொண்டே 45,000 ரூபாய் சம்பாதிக்கலாம். இதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. 1957ஆம் ஆண்டில் ஆர்பிஐ கவர்னராக இருந்த எச்.எம்.படேல் இந்த நோட்டில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். அப்படி உங்களிடம் இருந்தால் அதை Coinbazzar வெப்சைட்டில் விற்பனை செய்து 45,000 ரூபாய் வரையில் சம்பாதிக்கலாம். இந்த நோட்டில் 123456 என்ற சீரியல் நம்பரும் இருக்க வேண்டும்.

10 ரூபாய் நோட்டுக்கு ரூ.25,000!

உங்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.25,000 வரையில் சம்பாதிக்க ஒரு வாய்ப்பு உள்ளது. அசோக தூண் உருவம் பொறிக்கப்பட்ட 10 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், அதன் மூலம் நிறைய சம்பாதிக்கலாம். இந்த 10 ரூபாய் நோட்டு 1943ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் கீழ் வெளியிடப்பட்டதாகும். இந்த நோட்டுகளில் சி.டி.தேஷ்முக் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இந்த நோட்டுக்கு உங்களுக்கு 25,000 ரூபாய் வரை கிடைக்கும். இதுபோன்ற நோட்டுகளை நீங்கள் கீழ்க்காணும் வெப்சைட்களில் விற்பனை செய்யலாம்.

http://dir.indiamart.com/impact/old-coins.html

http:www.indiancurrencies.com

0 Shares

Leave a Reply

Your email address will not be published.