அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

0 Shares

58,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்க தீர்மானம்!

இலங்கையில் 58,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கே இவ்வாறு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இவர்களுக்கு மாதாந்தம் 41,000 ரூபா சம்பளம் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

நாடு எதிர்கொண்ட கொவிட் தொற்றுடனான நெருக்கடி காரணமாக பட்டதாரிகளுக்கு தொழில் பயிற்சி வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இதன் போது சுட்டிக்காட்டினார்.

0 Shares

Leave a Reply

Your email address will not be published.