மிகவும் எளிய முறையில் குறைந்த நேரத்தில் சுவையான பூரி உடன் பூரி மசாலா செய்து உண்டு மகிழுங்கள்.

share this..

மிகவும் எளிய முறையில் குறைந்த நேரத்தில் சுவையான பூரி உடன் பூரி மசாலா செய்து உண்டு மகிழுங்கள். இந்த ரெசிபியை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

பூரி மசாலா செய்ய தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு மசாலா

உருளைக்கிழங்கு (நடுத்தர அளவு) – 4

தண்ணீர் – 3 கப் + 2 கப்

எண்ணெய் – 2 தேக்கரண்டி

கடுகு விதைகள் – ½ டீஸ்பூன்

கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்

அசஃபோடிடா – 1 சிட்டிகை

இஞ்சி (பொடியாக நறுக்கியது) – 1 அங்குலம்

பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) – 3

கறிவேப்பிலை – 10

முந்திரி – 5

வெங்காயம் (மெல்லியதாக வெட்டப்பட்டது) – 2

தக்காளி – 1

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

பெசன் மாவு – 1 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி இலைகள் (பொடியாக நறுக்கியது) -¼ கப்

பூரி மசாலா செய்முறை :

ஒரு குக்கர் இல் 3 கப் தண்ணீர், 4 உருளை கிழங்கு வைத்து 6 விசில் வரும் வரை வெக வைக்க வேண்டும்.

பின்பு உருளை கிழங்கு தோலை எடுத்து விட்டு வெட்டி வைத்து கொள்ள வேண்டும்

ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய், 1/2 டீஸ்பூன் கடுகு, 2 டீஸ்பூன் கடலைப் பருப்பு, பெருங்காயம் 1 சிட்டிகை , 1 inch இஞ்சி, 3 நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்பு அதில் 10 கறிவேப்பிலை, 5 முந்திரி, 2 வெங்காயம் போட்டு வதக்கவும்.

பின்பு அதில் 1 தக்காளி, தேவையான அளவு உப்பு, 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

பின்பு அதில் 2 கப் தண்ணீர், 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

பின்பு அதில் 1/4 கப் கொத்தமல்லி சேர்த்து கொள்ளவும்.

பூரி செய்ய தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 1 ½ கப்

ரவா – 1 டீஸ்பூன்

எண்ணெய் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

எண்ணெய் – வறுக்க தேவையான அளவு

பூரி செய்முறை :

ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் கோதுமை, 1 டீஸ்பூன் ரவை , தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மாவு கட்டி ஆகும் வரை நன்றாக பிசையவும்.

1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக பிசையவும். பின்பு அதில் இருந்து எலுமிச்சை போல் மாவை பிரித்து எடுத்து கொள்ளவும்.

மாவு தட்டை ஆக்கும் பொது ஒட்டாமல் இருக்க சிறிது கோதுமை சேர்த்து உருளை கட்டை வைத்து நன்றாக தட்டை ஆக்கி கொள்ளவும்.

பின்பு கடாயில் பொரித்து எடுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி
தட்டை ஆக்கிய மாவை எண்ணையில் போட்டு நன்றாக உப்பி பொன் நிறம் ஆனதும் எண்ணெய் வடிகட்டி எடுக்கவும்

share this..

Leave a Reply

Your email address will not be published.