மிகவும் சுவையான மற்றும் தென்னிந்தியாவில் பிரபலமான குடல் வறுவல் செய்ய தயாரா, இந்த விடியோவை பாருங்கள்.

குடல் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
ஆட்டிறைச்சி குடல் – 800 க்ராம்ஸ்
வறுக்க மற்றும் அரைக்க தேவையான பொருட்கள்:
உலர்ந்த சிவப்பு மிளகாய் – 8
கொத்தமல்லி விதை – 2 தேக்கரண்டி
சீரகம் – 2 டீஸ்பூன்
கருப்பு மிளகு – 2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
இலவங்கப்பட்டை – 1 அங்குலம்
பூண்டு – 8 பற்கள்
இஞ்சி – 1 அங்குலம்
அரிசி – 3 டீஸ்பூன்
பிற தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 2
தக்காளி – 4
தண்ணீர் – ½ கப் + 3 கப்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 3 தேக்கரண்டி
கடுகு – ½ டீஸ்பூன்
பெருஞ்சீரகம் – ½ டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 30
பூண்டு – 5 பற்கள்
கருவேப்பிலை – 15
கொத்தமல்லி – ¼ கப்
செய்முறை:
ஆட்டிறைச்சி குடலை நன்றாக கழுவி வெட்டிவைத்து கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியை நன்றாக அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

பூண்டு மற்றும் இஞ்சி தவிர அணைத்து பொருட்களையும் உலர வருது கொள்ளவும். உலர வறுத்த பொருட்கள் அனைத்தையும் இஞ்சி, பூண்டு மற்றும் ½ கப் தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து கொள்ளவும்.

ஒரு பிரஷர் குக்கரில் ஆட்டிறைச்சி குடல், வெங்காயம் மற்றும் தக்காளி விழுது, மசாலாக்கள் விழுது, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்.

அணைத்து பொருட்களையும் 3 கப் தண்ணீர் உத்தி 10 விசில்களுக்கு பிரஷர் குக் செய்யவும்.
வேகவைத்த ஆட்டிறைச்சி குடலை எடுத்து வைத்து கொள்ளவும்.

மற்றொரு வாணலியில், 2 தேக்கரண்டி எண்ணெய், கடுகு, பெருஞ்சீரகம் விதைகள் சேர்த்து வெடிக்க விடவும்.
சின்ன வெங்காயம், இடித்த பூண்டு சேர்த்து கொள்ளவும். சின்ன வெங்காயம் மென்மையாகும் வரை வறுக்கவும்.
கருவேப்பிலை சேர்க்கவும்.

சமைத்த ஆட்டிறைச்சி குடலை சேர்த்து 5 நிமிடத்திற்கு வேகவைக்கவும்.
வெட்டியா கொத்தமல்லி சேர்த்து சூட்டில் இருந்து அகற்றவும்.
சூடாக சாதம் அல்லது இட்லி உடன் பரிமாறவும்.