கோயம்புத்துர் பிரபலமான அரிசி பருப்பு சாதம் செய்ய தயாரா. இந்த விடியோவை பார்த்து வெறும் 30ஏ நிமிடங்களில் செய்திடலாம்.
கோயம்புத்துர் பிரபலமான அரிசி பருப்பு சாதம் செய்ய தயாரா. இந்த விடியோவை பார்த்து வெறும் 30ஏ நிமிடங்களில் செய்திடலாம்.

அரிசி – 2 கப்
துவரம்பருப்பு – ½ கப் + ¼ டீஸ்பூன்
சின்னவெங்காயம் – 20
தக்காளி – 1
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 5 கப்
அரைக்க தேவையான பொருட்கள் :
கொத்தமல்லி விதைகள் – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – ¼ டீஸ்பூன்
பெருஞ்சீரகம் – ¼ டீஸ்பூன்
இலவங்கப்பட்டை – ½ அங்குலம்
கிராம்பு – 2
பூண்டு – 7
தாளிக்க தேவையான பொருட்கள்:
கடலைஎண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – ¼ டீஸ்பூன்
உளுந்து – ¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை – 10
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
காய்ந்த சிவப்பு மிளகாய் – 7

அரிசி மற்றும் துவரம்பருப்பை 30 நிமிடங்களுக்கு கழுவி ஊற வைக்கவும்.
அரைக்க குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களை அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
பிரஷர் குக்கரில் எண்ணெய்யை சூடாக்கி, தாளிக்க தேவையான பொருட்களை சேர்க்கவும்.

அடுத்து வெங்காயம், காய்ந்த சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
அரைத்த கலவையை சேர்க்கவும்.

ஊறவைத்த அரிசி மற்றும் பருப்பு, மற்றும் 5 கப் தண்ணீர் சேர்க்கவும்.
பின்னர் 4 விசில்களுக்கு சமைக்கவும்.
குக்கரில் அழுத்தம் குறைந்தவுடன் நெய்யுடன் சூடாக பரிமாறவும்.