வஞ்சரம் மீன் வறுவல் வஞ்சரம் வறுவல் செய்ய தேவையான பொருட்கள் Vanjaram Fish Fry

share this..

வஞ்சரம் மீன் பிரை, என்றும் அசைவ பிரியர்கள் மிகவும் விரும்புவது. வஞ்சரம் மீன் பிரை மிகவும் எளிமையாக செய்யக்கூடியது. எண்ணெயில் நன்றாக பொரித்து எடுக்க, மொறு மொறுவென இதன் சுவை மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டிடும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மீன், வைட்டமின் A நிறைந்தது.

வஞ்சரம் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:

வஞ்சரம் மீன் – 500 கிராம்

எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – 1 ½ டீஸ்பூன்

சோளமாவு – 1 தேக்கரண்டி

தண்ணீர் – 2 தேக்கரண்டி

கடலெண்ணெய் – தேவையனை அளவு

செய்முறை:

வஞ்சரம் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து ஒரு டவல் கொண்டு நன்றாக ட்ரய் ஆக்கிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, சிவப்பு மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், சோளமாவு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியான பேஸ்ட்டாக ஆகா கலந்து செய்து கொள்ளவும்.

ஒரு ஒரு மீன் துண்டுகளை எடுத்து நன்றாக இரு பக்கமும் மசாலாவை தடவவும். அணைத்து மீன் துண்டுகளுக்கு இதை செய்ய வேண்டும்.

3-4 மணி நேரத்திற்கு மீன்களை ஊறவைக்கவும் செய்யவேண்டும்.

ஒரு தவாவில் வில் கடலெண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும். அதில் மீன் துண்டுகளை இரு பக்கமும் நன்றாக சமைக்க படும் வரை வறுக்கவும் செய்யவும். மிதமான தீயில் ஒரு பக்கம் சமைக்க படுவதிற்கு 3 நிமிடங்கள் ஆகும்.

சூடாக லெமன் துண்டு மற்றும் வெங்காயம் துண்டு உடன் பரிமாறவும்

உங்கள் சமயலறைக்கு மிகவும் அதிக தரமான சமையல் பாத்திரங்கள் வாங்க இந்த லின்கை கிளிக் செய்து Cookd ஷாப்பில் வாங்குங்கள் – https://shop.cookdtv.com

எங்களின் Facebook பக்கத்தை லைக் செய்யவும் – https://www.facebook.com/CookdTV/

எங்களை Instagram இல் பின்தொடர இந்த லின்கை கிளிக் செய்யுங்கள் – https://www.instagram.com/cookdtv/

எங்களை Twitter இல் பின்தொடர இந்த லின்கை கிளிக் செய்யவும் – https://twitter.com/CookdRecipes

share this..

Leave a Reply

Your email address will not be published.