மிகவும் எளிய முறையில் குறைந்த நேரத்தில் சுவையான கிறிஸ்துமஸ் ஃப்ரூட் கேக் செய்து உண்டு மகிழ தயாரா?

share this..

கிறிஸ்துமஸ் ஃப்ரூட் கேக்:

தேவையான பொருட்கள்:

வெண்ணெய் – 175 கிராம்

பழுப்பு சர்க்கரை – 175 கிராம்

மைதா – 160 கிராம்

கிறிஸ்துமஸ் மசாலா மிக்ஸ் – 1 தேக்கரண்டி

ரம்மில் ஊறிய உலர் பழங்கள் – 200 கிராம்

முட்டை – 3

எண்ணெய் – 35 மிலி

வெண்ணிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்

பாதாம் (தோல் நீக்கப்பட்டது) – 10 – 15

செய்முறை:

வெண்ணெய், பழுப்பு சர்க்கரை மற்றும் கிறிஸ்துமஸ் மசாலா மிக்ஸை ஒரு ஹாண்ட் மிக்சர் உதவியுடன் நன்றாக கலக்கவும்.

முட்டைகளை முறைக்கு ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும்.

ஊறவைத்த பழங்கள் மற்றும் பாதாம்களை சேர்த்து நன்றாக கலக்கவும்.

இறுதியாக மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.

எண்ணெய் சேர்த்து கலக்கவும்.

பேக்கிங் ட்ரேயில் பேக்கிங் ஷீட் வைத்து, அதில் கேக் கலவயை ஊற்றி 180C வெப்பநிலையில் 40-45 நிமிடங்கள் பேக் செய்யவும்

நன்றாக ஆறவைத்த பின் பரிமாறவும்.

share this..

Leave a Reply

Your email address will not be published.