லண்டனிலிருந்து வந்த பெண் பொதியொன்றில் ச டலமாக மீட்பு! கிளிநொச்சியில் ப யங்கரம்
கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் வாழ்ந்த பெண் நேற்று மாலை காணாமல் போயிருந்த நிலையில், இன்று ச டலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்று கா ணாமல் போயிருந்த நிலையில், உறவினர்களினால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையில், வீட்டில் இ ரத்தக்கறை காணப்பட்ட நிலையில், குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதன் பின்னணியில், கிளிநொச்சி – அம்பாள்கும் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கை து செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தன.
சந் தேகநபர் வழங்கிய தகவலுக்கு அமைய, குறித்த பெண்ணின் ச டலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கந்தப்புரம் பரம்பாலம் பகுதியிலிருந்து ச டலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சட லம் பொதியொன்றில் பொதி செய்யப்பட்டு, வீச ப்பட்ட நிலையிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மற்றுமொரு நபரின் உதவியுடன், மோட்டார் சைக்கிளில் சட லத்தை எடுத்து சென்று வீசியதாக குறித்த இளைஞன் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பெண் அண்மையில் பிரித்தானியாவிலிருந்து நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.