அரச பணியாளர்கள் தொடர்பில் இன்று வெளிவரவுள்ள மற்றுமொரு சுற்றுநிருபம்
அரச பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கும் சுற்றுநிருபம் இன்று வௌியிடப்படவுள்ளது.
2022 ஆம் அண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைக்கமைய, இந்தச் சுற்றுநிரூபம் வௌியிடப்படவுள்ளதாக பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும், இது தொடர்பிலான அறிவிப்பு வெளிவந்த போது ஓய்வுபெறும் வயதெல்லை 62 ஆக காணப்பட வேண்டும் எனத் தெரிவித்து இலங்கை நிர்வாக சேவை சங்கம் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.
கடிதம் ஒன்றின் மூலம் ஓய்வுபெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கும் திட்டத்தை தாம் எதிர்ப்பதாக இலங்கை நிர்வாக சேவை சங்கம் சம்பந்தப்பட்ட தரப்புக்கு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று(06) குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.