கெட்ட நீரை 20 நிமிடத்தில் உடலிலிருந்து வெளியேற்றும் வாழையிலை குளியல்.
இதற்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட முழு வாழையிலைகள் தேவைப்படும்.
வாழையிலை குளியல் மேற்கொள்பவரின் உயரத்திற்கேற்ப 7-8 வாழைஇலைகள் தேவைப்படும்.
முதலில் ஒரு டவலை நீரில் நனைத்து பிழிந்து தலையில் சுற்றி கொள்ள வேண்டும்.
நான்கிலிருந்து ஆறு டம்ளர் வரை நீர் குடிக்க கொடுக்க வேண்டும்.

நல்ல சூரிய ஒளி படக்கூடிய சமதளத்தில் தரையில் வாழை இலைகளை விரித்து படுக்கவைத்து உடல் முழுவதும் வாழை இலைகளை கொண்டு சுற்ற வேண்டும்.
உடலின் எந்த பாகமும் வெளியே தெரிய கூடாது. மூச்சு விடுவதற்க்கு மூக்கின் அருகில் உள்ள பகுதியை மட்டும் வெட்டி எடுக்க வேண்டும்.
நகரங்களில் இருப்பவர்கள் மொட்டை மாடியில் இதை செய்யலாம். சுமார் இருபதிலிருந்து முப்பது நிமிங்கள் வரை அப்படியே படுக்க வேண்டும்.
உடல் முழுவதும் நன்றாக வேர்த்து இனிமேலும் படுக்க முடியாது என்ற நிலை வந்தவுடன் இலைகளை அவிழ்த்து விடலாம்.
எழுந்து பார்த்தால் உடலில் உள்ள எல்லா கெட் ட நீரும் வெளியே வந்திருக்கும்.
எழும்பியவுடன் 5-6 முறை நன்றாக சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும்.
தேன் மற்றும் சிறிது இந்துப்பு கலந்த தண்ணீரை 2 கப் குடிக்க கொடுக்க வேண்டும்.
20 நிமிடம் பொறுத்திருந்து பின்னர் குளிக்கலாம். சோப்பு உபயோகிக்க கூடாது.
இயற்கையான முறையில் உடலில் இருக்கும் கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றும் இந்த வாழையிலை குளியலை 18 வயது முதல் 80 வயது வரை உள்ளவர்கள் எடுக்கலாம்.
உடல் பலகீனமாக இருப்பவர்கள் இந்த குளியலை எடுக்க கூடாது.
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள்,ஆஸ்துமா நோயாளிகள், மாதவிலக்கு சமயங்களில் இந்த குளியலை எடுக்க கூடாது.
இதய நோயாளிகள் போன்றவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று இதை செய்யலாம்.
இதை நீங்கள் சுயமாக செய்யக்கூடாது. முதல் முறையாக செய்யும் பொழுது நன்கு தெரிந்தவர் அருகில் இருக்க வேண்டும்.
காலையில் 8 மணி முதல் 11 மணிவரை மட்டுமே இதை செய்ய வேண்டும். செய்யும் பொழுது சூரிய வெளிச்சம் நன்றாக உடலில் படவேண்டும்.