மூலநோய், மலசிக்கல் நிரந்தரமாக குணமாக இதை வெறும்வயிற்றில் சாப்பிடுங்க
அனைவரது உடலில் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மலச்சிக்கல். அந்த மலச்சிக்கல் பிரச்சனை அதிகம் இருந்தாலே, அதற்கு அடுத்த நிலையான பைல்ஸ் வந்துவிடும். பைல்ஸை மூல நோய் என்றும் அழைப்பர்.இத்தகைய பைல்ஸ் பிரச்சனை வந்தால் சரியாக உட்கார முடியாது. எப்போதும் ஒருவித டென்சன் இருக்கும். ஏன் தெரியுமா? ஆம், மலவாயில் புண் வந்தால் பின்னர் எப்படி இருக்கும்.
அதிலும் பைல்ஸ் என்பது சாதாரணமானது அல்ல. அது வந்தால், மலவாயில் கழிவுகளை வெளியேற்றியப் பின்னரும், வெளியேற்றும் போதும் கடுமையான வலி ஏற்படுவதோடு, இரத்தப்போக்கு, அரிப்பு போன்றவை ஏற்படும்.
இந்த பிரச்சனை வருவதற்கு உடலில் அதிகப்படியான வெப்பமும் ஒரு காரணம். எனவே மலச்சிக்கல் வந்தால், அதனை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட வேண்டும். அதற்கான மருந்து வீட்டிலேயே இருக்கிறது.மூலம் என்பது ஆசன வாயிலுள்ளும், வெளியிலும் தேவையற்ற சதைகள் வளர்ந்து குத வாயிலை அடைத்துத் துன்புறுத்துவக்கூடியது ஆகும்.