இளநீர் பற்றி தேரையர் சித்தர் சொன்ன ரகசியம் என்ன தெரியுமா?
இந்திய மருத்துவ முறையில் இளநீர் பெரும்பங்கு வகிக்கிறது. இளநீர் ஒரு சிறந்த டானிக்காக வயதானவர்களுக்கும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பயன்படுகிறது. இளநீர் இரத்தத்தைத் சுத்தப்படுத்தும்.
இரத்தத்தில் கலந்துள்ள தேவையறற அசுத்த நீர்களை நீக்கும். இரத்தச் சோகையை போக்குகிறது. இரத்தக் கொதிப்பைக் குறைக்கும் சக்தி இளநீருக்கு உண்டு. இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.
அம்மை நோயின் தாக்கம் கண்டவர்கள், இளநீர் அருந்தினால் நோயின் வீரியம் குறையும். நாவறட்சி, தொண்டைவலி நீங்கும். சிறிநீர் பெருக்கியாகவும், சிறுசீரகம் சீராக இயங்கவும், இளநீர் உதவுகிறது. சிறுநீரக கல்லடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.