உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தா மாம்பழம் சாப்பிடாதீங்க.! அது பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும்

share this..
வணக்கம் எமது பதிவுகள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் தவறுகள் ஏதும் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்

உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தா மாம்பழம் சாப்பிடாதீங்க.! அது பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும்


சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் முக்கிய இடம் மாம்பழத்திற்கு உண்டு. சுவைக்காக மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும் .

மாம்பழத்தில், பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. நார்ச்சத்து, வைட்டமின் சி வைட்டமின் ஏ என் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் மாம்பழம், சிறந்த ஆக்ஸிஜனேற்றிகளாகவும் உள்ளது.

இருப்பினும் மாம்பழத்தை ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் அதிகம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அது அதிக ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளும் போது, அது அவர்களின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டின்றி அதிகரித்து, நிலைமையை மோசமாக்கிவிடும்.

எனவே சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை சாப்பிட விரும்பினால், ஒரு துண்டிற்கு மேல் சாப்பிடக்கூடாது.

மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

எனவே வயிற்றுப் போக்கு பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், மாம்ம்பழத்தை சாப்பிடக்கூடாது.

இல்லாவிட்டால், மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து வயிற்றுப் போக்கை தீவிரப்படுத்தி, உடலில் நீரிழப்பை ஏற்படுத்திவிடும். இது தவிர வேறு ஏதேனும் வயிற்று பிரச்சனை உள்ளவர்களும் மாம்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மாம்பழத்தில் கலோரிகள் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருந்தால், மாம்பழத்தை அதிகம் சாப்பிட்டுவிடாதீர்கள். இல்லாவிட்டால், அது உடல் பருமனை மேலும் அதிகரிக்கும்.

அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் இப்படி கால்சியம் கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை உட்கொண்டால், அது அவர்களின் நிலைமையை மோசமாக்கிவிடும். எனவே கவனமாக இருங்கள்.

பொட்டாசியம் அதிகம் நிறைந்த மாம்பழத்தை அளவுக்கு அதிகமாக உண்ணும் போது, உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகிறது. உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால், அது ஏற்கனவே இதய நோய் உள்ளவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

share this..

Leave a Reply

Your email address will not be published.