ஒரு நிமிடம் போதும் மொத்த கரப்பான்பூச்சி அழிந்துவிடும்

share this..
வணக்கம் எமது பதிவுகள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் தவறுகள் ஏதும் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்

ஒரு நிமிடம் போதும் மொத்த கரப்பான்பூச்சி அழிந்துவிடும்

கரப்பான் பூச்சியில் 400 இனங்கள் உள்ளன. இவை எவ்வித தட்ப, வெப்ப சூழ்நிலைகளிலும் வாழக்கூடியவை. பகல் நேரங்களில் மறைவாக இருந்து, இரவில் வெளிவந்து இரை தேடும் பூச்சியினம் இது. சுத்தம் செய்யப்படாத சமையலறை, குளியலறை மற்றும் கழிவறைகளில் இவை தென்படும்.

எல்லா பொருட்களையும் உண்ணும் இதன் உணவு முறையை ‘ஆம்னி வோரஸ்’ என்று குறிப்பிடுவர். வீடுகளில் தொட்டிகளை மூடிவைக்காவிட்டால் அவற்றில் முட்டையிட்டு, இனப்பெருக்கம் செய்யத் தொடங்கி விடும். எனவே, வீட்டின் சுற்றுப்புற பகுதி, கழிவறை, குளியலறைகளை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.மேலும், கரப்பான்பூச்சிகள் உணவுபொருட்களை மொய்த்து, அசுத்தம் செய்வதுடன், அவற்றின் மேல் முட்டையிடும்.

பெண் கரப்பான் பூச்சிகள் உணவுப் பொருளின் மீது முட்டை யிட்டுச் செல்வதால், அதன் மீது பூஞ்சை வளர்ந்து, மனிதர்களுக்கு தொற்றுநோய்களைப் பரப்புகின்றன.

எனவே, உணவுப் பொருட்களை நன்றாக மூடிவைக்க வேண்டும்.

வெளிச்சம் படாத, மறைவான இடங்களில் இவை ஒளிந்து கொள்ளும். சுவரின் இடுக்குகள், வெடிப்புகள், சிறு துளைகளில் மறைந்து இனப்பெருக்கம் செய்யும்.

எனவே, அவற்றை அடைத்துவிட வேண்டும். கரப்பான்பூச்சிகளைக் கொல்லும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் பல இருந்தாலும், இயற்கை முறையில் கோதுமை மாவுடன், கொஞ்சம் போரிக் பவுடரும், சிறிதளவு நீரும் சேர்த்து கலந்து உருண்டை பிடித்து, கரப்பான்பூச்சி இருக்கும் இடத்தில் வைத்துவிட்டால், கரப்பான் பூச்சிகள் முழுமையாக அழிந்துவிடும்.

share this..

Leave a Reply

Your email address will not be published.