கிளிநொச்சி , பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா ஜெம்ஸ்புரன் கடற்தொழில் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட எல்லையில் நேற்றைய தினம் 30.09.2022 காலை 10.30 தொடக்கம் 12.30 வரை 600 கண்டல் தாவரங்கள் நாட்டி வைக்கப்பட்டது.
இச் செயற்திட்டமானது கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் இடம்பெறும் கடலரிப்பை தடுப்பதற்காக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான (MSEDO) நிறுவனத்தினாலே 600 கண்டல் தாவரங்கள் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.
இவற்றினை நிறுவன உரிமையாளர் மற்றும் நாச்சிக்குடா யாகப்பர் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களால் நாட்டிவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


