Breaking News

உயிரையே பிறந்தநாள் பரிசாக கொடுத்த கல்லூரி மாணவர்: அதிர்ச்சியில் காதலி!

உனக்காக நான் உயிரையும் கொடுப்பேன் என காதலன் காதலிகள் வசனங்களை பரிமாறிக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனது காதலிக்காக தனது உயிரையே பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த மோகன் என்ற கல்லூரி மாணவர் கடந்த சில ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த சுமதி என்பவரை காதலித்து வந்தார்.

இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் அவ்வப்போது இருவருக்கும் சண்டையும் வந்ததாக தெரிகிறது.

அப்போதெல்லாம் ஒருவரையொருவர் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று இன்னொருவரை பயமுறுத்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி சுமதிக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு என்ன பரிசு வேண்டும் என மோகன் போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். இந்த விஷயத்திலும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வழக்கம்போல் சண்டை ஏற்பட்டது.

அப்போது மோகன் வழக்கம்போல், ‘நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறியதை அடுத்து சுமதி வழக்கமாக காதலன் கூறுவது தானே என்று அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்து விட்டார். ஆனால் காதலியிடம் சொன்னபடி திடீரென தூக்கில் தொங்கி மோகன் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து போலீசார் இதுகுறித்து விசாரணை செய்த போது அவருடைய செல்போனை ஆய்வு செய்தனர்.

அப்போது கடைசியாக அவர் சுமதிக்கு தான் போன் செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து சுமதியிடம் போலிசார் விசாரித்த போது அவர் பிறந்த நாளின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தை கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

காதலிக்கு பிறந்தநாள் பரிசு கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனையால் கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Kilavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *