தொகுப்பாளர் கோபிநாத்தின் யாரும் பார்த்திராத திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.
80’ஸ் மற்றும் 90’ஸ் காலகட்டத்தில் பொதுவாக தொலைக்காட்சி என்றாலே அதில் சீரியல்கள் ஒளிபரப்பாகும். அதைத் தொடர்ந்து புது பாடல்கள் அல்லது புது படம் என ஒளிபரப்பி கொண்டிருந்தார்கள்.
ஆனால் தற்போதயெல்லாம் புதுசு புதுசாக நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு, விளையாட்டுக்கள் போன்றவை ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. தற்போது தொலைக்காட்சிகளில் அதிகமாக பார்க்கப்படுவது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தான்.
அதிலும் தமிழகத்தில் ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. அதிலும் சிறப்பாக செயல்படுத்தியது விஜய் தொலைக்காட்சிதான்.

விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் புதிது புதிதாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வரும். ஆனால் பல ஆண்டுகளாக நீயா நானா நிகழ்ச்சி பல மக்களுக்கு சுவாரசியமான நிகழ்ச்சியாக பார்க்கப்பட்டு வருகின்றது.
அந்த நிகழ்ச்சியை கோபிநாத் அவர்கள் தொகுத்து வழங்குவதற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கோபிநாத் அந்த நிகழ்ச்சியை நடத்தும் விவாதத்தினை யாராலும் அவ்வளவு எளிதாக செய்திட முடியாது.

கோபிநாத் அவர்கள் ஒவ்வொரு நிகழ்ச்சியின் சமூக அக்கறையுடன் நடத்துவார். அது மட்டும் இல்லாமல் அவர் பல புத்தகங்களை படித்து தனது அறிவை மேம்படுத்தியுள்ளார்.பல புத்தகங்களை எழுதவும் செய்துள்ளார். இவரின் குடும்ப வாழ்க்கையை பொருத்தவரையில் இவர் துர்கா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அவரின் பெயர் வெண்பா.
இவரின் குடும்ப புகைப்படங்கள் தற்போதைய இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

