இலங்கையிலிருந்து மற்றுமொரு போட்டியாளராக அசானி கனகராஜ் கலந்து கொண்டுள்ளார்.
சரிகமப
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஷோக்களில் ஒன்று தான் “சரிகமப“.
இந்த நிகழ்ச்சியில் இலங்கை, இந்தியா என பல நாடுகளில் உள்ள சிறுவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளார்கள். அதிலும் அவர்கள் பாடும் போது வியப்பாகும் வேடிக்கையாகவும் இருக்கும்.
சரிகமப நிகழ்ச்சியில் பாட வேண்டும் என்பதற்காக வெளிநாடுகளில் இருக்கும் சிறுவர்கள் தங்களின் முழு முயற்சிகளை செய்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் இலங்கை – யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிஸா என்பவர் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடிக் கொண்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து வானொலியை மாத்திரம் வைத்து பாட கற்றுக் கொண்ட அசானி கனகராஜிம் கலந்து கொண்டுள்ளார்.
மலையகம், கண்டி பகுதியில் இருக்கும் அசானி சில பொருளாதார பிரச்சினை காரணமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தாமதமாகி விட்டதாம்.
ஆனால் அவர்களின் நிலைமையை புரிந்து கொண்டு பிரபல தொலைக்காட்சி அசானிக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.
இந்த செய்தி இலங்கை இணையவாசிகள் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் வீடியோக்காட்சியை பார்த்த இணையவாசிகள், “ சாதிக்க நினைத்தால் எப்படியும் சாதிக்கலாம்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.