Breaking News

மஞ்சள் க யி ற் றில் தாலி கட்.டு.வதில் இவ்வளவு நன்..மைகள் இருக்கா..?? வியக்க.. வைக்கும் தகவல்கள்

பண்டைய காலத்தில் இருந்து தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே மணமகன், மணமகள் கழுத்தில் கட்டி வந்ததால் தாலி என்ற பெயர் வந்தது.


தாலிக்கு தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது பொருளாகும். ஒவ்வொரு இடத்தின் தட்பவெப்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றது.

திருமணத்தின் போது பெண் கழுத்தில் கட்டும் மாங்கல்ய தாலிக் கயிறானது ஒன்பது இழைகளைக் கொண்டது. அந்த ஒன்பது இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.
இந்த ஒன்பது குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காக ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறது.

கணவன் வாழும் வரை மனைவியின் மார்பில் எப்பொழுதும் அவன் கட்டிய தாலி தவழ வேண்டும். அவனை நெஞ்சோடு தாங்கி வாழும் தன்மையை காலம் முழுவதும் அந்த பெண் எடுத்துக்காட்ட வேண்டும் என்று அர்த்தமாகும்.
பெண்ணின் மார்பில் உயிரோட்டம் உள்ள இதயத்தில் இந்த தாலி பட்டுக் கொண்டு இருக்க, அது ஒரு சீன மருத்துவ முறையில் அக்குபஞ்சர் முறை போன்று செயல்படுகின்றதாம்.

மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து குளிக்கும்போது தினமும் தாலியில் மஞ்சளைப் பூசுகின்றனர். மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி.
முன்பெல்லாம் மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள். அப்போது அப்பெண் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.
கிருமி நாசினியான மஞ்சள் தாயையும் அவள் வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.

பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மஞ்சள் கயிறு தாலியில் கோர்த்து போட்டிருந்தனர்.
அப்போதெல்லாம் நம் தமிழகத்தில் எவ்வளவு சுகபிரசவங்கள் நடந்தது என்றும், தங்க செயினில் தாலி அணியும் இப்போது எவ்வளவு சுகபிரசவங்கள் நடை பெறுகிறது என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புரியும்.

அதுபோல் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை எத்தனை பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் இருந்தது, இப்போது எத்தனை பெண்களுக்கு இருக்கிறது என்றும் கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு நன்கு புரியும்.
இப்போதும் கூட கிராமங்களில் கர்ப்பம் தரித்த பெண்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது தலையில் வேப்பிலை இலையை செருகி வைப்பார்கள் அது எதற்காக?
வேப்பிலை ஒரு சிறந்த கிருமிநாசினி.

கர்ப்பிணிகள் தலையில் இருக்கும் வேப்பிலையானது அவர்கள் செல்லும் வழியில் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கிருமி தொற்றிலிருந்து காக்கிறது.
நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்பதை புரிந்து செயல்படுவோம்.

About tamilkilavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *