பொதுவாகவே நம்முடைய வயிற்றில் கழிவுகள் மற்றும் அழுக்குகள் தேங்கும்.அப்படி வயிறு கெட்டுப் போயிருந்தால் அவை சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். குறிப்பாக, வாய் துர்நாற்றம் வீசும், பசியின்மை, வயிற்றில் தங்கும் நச்சுக்களால் சிறுசிறு பூச்சி, புழுக்கள் உருவாகும்.இந்த பிரச்சினைகளால் இயல்பாகவே வயிறு உப்பசம் (bloating), தொப்பை (belly) ஆகியவை உண்டாகும்.
செரிமான மண்டலத்தின் ஒரு பாகம் தான் குடல். உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்களை குடல் தான் உறிஞ்சும். ஒருவரது குடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் தற்போது தான் உட்கொண்டு வரும் ஆரோக்கியமற்ற உணவுகளால் குடல் சுவர்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாவதோடு, குடலில் நச்சுக்களின் தேக்கமும் அதிகரிக்கிறது.
மூன்றே நாட்களில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி? ஒருவரது குடல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், அதனால் நாம் நினைத்துப் பார்க்க முடியாதவாறான பல சிக்கல்களை சந்திக்க வேண்டிவரும். ஆகவே ஒருவர் தங்களது குடலை சுத்தம் செய்யும் முயற்சியில் அடிக்கடி ஈடுபட வேண்டும்.
குடலை சுத்தம் செய்ய உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் தான் உதவும். இப்போது நாம் குடலை சுத்தம் செய்ய உதவும் சில இயற்கை வழிகளைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இங்கு ஒரு பானம் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த பானங்களை தினமும் பருகி வந்தால், குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.