Breaking News

உங்களுக்கு ரொம்ப நாளாவே ஒற்றைத் தலை வலி யால் அவதிபடறீங்களா ?? அதற்க்கு ஒரே தீர்வு இதோ ..!!

தலைவலியிலேயே மிகக் கடுமையானதாக இருப்பது மைக்ரேன் என்னும் ஒற்றைத் தலைவலி தான். சிலர் வருடக் கணக்கில ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.என்னதான் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டாலும் நிரந்தரமாக சரியாவதில்லை. அதிக பசி, மன அழுத்தம், ஹைபர் டென்ஷன், ஹேர்ஓவர் என பல்வேறு காரணங்களால் இந்த ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது.ஒற்றைத்


தலைவலிக்கான நிரந்தரத் தீர்வு ஆரோக்கியமான உணவுமுறை தான். ஒற்றைத் தலைவலி இருப்பவர்களுக்கு ஒரு புறம் நெற்றிப் பொட்டிலிருந்து காதுக்குப் பின்புறம் போய் கழுத்து வரை ஒருபக்கம் மட்டும் வலி உயிரை எடுத்துவிடும்.சிலருக்கு தலைவலி வரும்போது குமட்டல் மற்றும் வாந்தி உண்டாகும். சிலருக்கு சில மணி நேரங்கள் வரை இருக்கும். ஒருசிலருக்கு சில நாட்கள் கூட நீடிக்கும்.

அதனால் வேறு எந்த வேளையிலும் கவனம் செலுத்த முடியாது. இதை எப்படி தான் சரிசெய்வது? வேறு எப்படி? உணவின் மூலமாகத்தான்.கீழ்வரும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி சிறிது நேரத்திலேயே குறைய ஆரம்பிக்கும்.தொடர்ந்து இந்த உணவுகளை உங்களுடைய டயட்டில் சேர்த்து வந்தால் மைக்ரேன் என்னும் ஒற்றைத் தலைவலிக்கு முற்றிலும் தீர்வு கிடைக்கும்.

மக்னீசியம் நிறைந்த உணவுகள் ஒற்றைத் தலைவலியைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயலாற்றுகின்றன.பாதாம், முந்திரி, சியா மற்றும் ஆளி விதைகள், சாரைப் பருப்பு, வால்நட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தினசரி உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.இவற்றை முறையாக உங்களுடைய டயட்டில் சேர்த்துக் கொண்டால் ஒற்றைத் தலைவலி பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்கும்.

​புதினா டீஉடலில் ஏற்படும் எல்லா பிரச்சினைக்கும் அடிப்படையாக இருப்பது நீர்ச்சத்து குறைபாடு. உடலை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டியது அவசியம்.உடலை நல்ல நீரேற்றத்துடன் வைத்திருந்தாலே போதும் தலைவலி, சளி போன்ற எதுவும் ஏற்படாது. சைனஸ் அழுத்தத்தால் கூட ஒற்றைத் தலைவலி ஏற்படும்அத்தகைய ஒற்றைத் தலைவலிக்கு உடனடியாகத் தீர்வளிப்பதில் புதினா டீக்கு சிறப்பாக இடமுண்டு.

புதினா மற்றும் இஞ்சி சேர்த்த டீ சைனஸ் அழுத்தத்தையும் குறைக்கும் ஒற்றைத் தலைவலிக்கும் தீர்வு கிடைக்கும்.​காய்கறிகள், பழங்கள்நம்முடைய உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற வேண்டுமானால் அதற்கு சரியான வழி நம்முடைய தினசரி உணவில் பெரும்பகுதி காய்கறிகள் மற்றும் பழங்களால் ஆனதாக இருக்க வேண்டும்.காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டாலே தலைவலி, உடல் பலவீனம் போன்ற பிரச்சினைகள் இருக்காது.

​தயிர்தயிர் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். அப்படியே தயிராக எடுத்துக் கொள்வதை விட மோராக அடித்து நிறைய தண்ணீர் சேர்த்து குடிப்பது இன்னும் சிறப்பு.தயிரில் புரோ-பயோடிக் அதிக அளவில் இருக்கிறது. இது தலைவலியை குறிப்பாக ஒற்றைத் தலைவலியைக் குறைக்கும்.​கடல் உணவுகள்ஒற்றைத் தலைவலியால் நீண்ட நாட்களாக அவதிப்படுகிறவர்கள் தங்களுடைய உணவு முறையில் கடல் உணவுகளை அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் காலப்போக்கில் ஒற்றைத் தலைவலி பிரச்சினை படிப்படியாகக் கட்டுக்குள் வரும்.

About tamilkilavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *