ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் “மலையக குயில்“ அசானி உத்தியோகபூர்வமாக போட்டிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
குறித்த ப்ரோமா தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
மேலும் கடந்த 11ஆம் திகதி பாராளுமன்றில் “மலையக மக்களைக் கௌரவப்படுத்தும் வகையில் அசானி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்“ என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பேசியிருந்த காட்சியையும் அதில் ஒளிபரப்பு செய்து அசானிக்கு பாராட்டுக்களையும் நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில் ஏனைய போட்டியாளர்களின் பெற்றோர்களின் முழு சம்மதத்துடன் அசானி போட்டியாராளராக தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சரிகமப நிகழ்ச்சியில் கண்டி பகுதியைச் சேர்ந்த தேயிலை பறிக்கும் தொழிலாளியின் மகளான அசானி கனகராஜின் பங்குப்பற்றுதல் மலையக மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளது என்றால் அது மிகையாகாது.