Breaking News

105 கி லோ எ டை யை கடகடவென குறைத்த கௌசல்யா.தி ருமணம் செய்யாதது ஏன்?

நடிகை கௌசல்யா தனது எடையை 105 கிலோவிலிருந்து குறைத்த நிலையில், தனது திருமணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.


நடிகை கௌசல்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த கௌசல்யா தமிழில் காலமெல்லாம் காதல் வாழ்க திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்த இவர், சில வருடங்களாக நடிப்பிலிருந்து விலகி இருந்தார். அதுமட்டுமின்றி இவரது உடல் எடையும் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளது.

இதற்கு காரணம் இவர் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், இவர் அதிகமாக மருந்து எடுத்துள்ளார். இதனால் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை அதிகரித்தார்.

தற்போது ஐந்தரை ஆண்டு இடைவெளிக்கு பின்பு மீண்டும் சீரியலில் எண்ட்ரி கொடுத்தார். ஆம் சுந்தரி சீரியலில் களமிறங்கினார்.

அப்பொழுது தனது உடல் எடையைக் குறைத்து காணப்பட்டதுடன், திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். தற்போது தனது திருமணம் குறித்து அவர் பேசுகையில், தனது பெற்றோருடன் ஒன்றி வாழ்ந்த என்னால் அவர்களை பிரிய முடியாது…. அவர்களும் என்னை விட்டு பிரியமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் தனக்கு பொருத்தமானவரை தான் இன்னும் காணாமல் இருப்பது காரணமாக இருக்கலாம்… தான் கிரிக்கெட் வீரரை காதலித்து பிரேக்கப் ஆகியதால் திருமணம் செய்யவில்லை என்று கூட வதந்தி பரவியது என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

About tamilkilavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *