Breaking News

ஒட்டுமொ த்த நோ ய் களுக்கும் அருமருந்தாகும் கொய்யா: தினசரி சாப்பிட்டலாமா?

வெப்ப மண்டல நாடுகளை பொருத்த மட்டில் மிகவும் மலிவான விலையிலும் இலகுவிலும் பெற்றுக்கொள்ளக் கூடிய பழங்களில் ஒன்று கொய்யா.


கொய்யா செடியின் சதைப்பற்றுள்ள பழங்கள் மற்றும் இலைகள் இரண்டும் உண்ணக்கூடியவை,
பங்கள் பெரும்பாலும் சிற்றுண்டியாகவும், இலைகளை பொதுவாக மூலிகை தேநீராகவும் எடுத்துக்கொள்ளலாம்.
கொய்யாவில்…

கொய்யாவில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆரஞ்சுப் பழத்தை விட வைட்டமின் சி அதிகமாக இருப்பது மட்டுமின்றி, கொய்யாவில் மற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளது.

கொய்யாவில் காணப்படும் முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று நார்ச்சத்து. நார்ச்சத்து மலத்தை திடப்படுத்துதல் மற்றும் மென்மையாக்குவதன் மூலம் செரிமானத்திற்கு உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்
இது வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் ஆகிய இரண்டின் அறிகுறிகளையும் எளிதாக சீர்செய்யக்கூடியது.

கொய்யா இலை சாறு வயிற்றுப்போக்கின் தீவிரத்தையும் கால அளவையும் குறைக்க உதவும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி உட்பட சில செரிமான கோளாறுகள் உள்ளவர்கள், கொய்யாவை தங்கள் உணவில் சேர்ப்பதன் மூலம் பயனடையலாம்.
மாதவிடாய் வலி உள்ள பெண்கள் கொய்யா இலையை சாப்பிட்டு பாருங்கள். மாதவிடாய் பிடிப்பைக் கையாள்வதில் வலி நிவாரணிகளை விட கொய்யா இலை சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
கொய்யா இலை தேநீரில் உள்ள பாலிபினால்கள் உணவில் இருந்து கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதை கட்டுப்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு இந்த விளைவு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.

உணவுக்குப் பிறகு கொய்யா இலை தேநீர் அருந்துவது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும்

About tamilkilavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *