பிக்பாஸ் வீட்டில் இருந்து உடல்நலக் குறைவால் பாதியிலேயே வெளியேறிய பவா செல்லதுரை பெற்ற சம்பள விபரம் வெளியாகியுள்ளது.
பாவா செல்லதுரை
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7ஆவது சீசன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் 20 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துக் கொண்ட பவா செல்லதுரை உடல் நலக் குறைவால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியிருந்தார்.
இவர் தமிழில் ஜோக்கர் , குடிமகன் , பேரன்பு , சைக்கோ ,ஜெய் பீம் , வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்களில் துணை கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்.
பவா செல்லதுரை பெற்ற சம்பளம்
பிக்பாஸ் வீட்டிற்குள் அனைவருக்கும் போட்டியாக இருப்பார் என எதிர்பார்த்திருந்த பவா செல்லதுரை வீட்டிலிருந்து வெளியேறியது ஏமாற்றத்தைக் கொடுத்தது. இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டில் பெற்ற சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி அவர் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள ஒரு வாரத்திற்கு 1 இலட்சத்திலிருந்து 2 இலட்சம் வரைக்கும் சம்பளம் என பேசப்பட்டது. ஆனால் அவர் ஒரு வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதால் அவருக்கு 2 இலட்சம் ரூபா வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வௌியாகியுள்ளது.