Breaking News

பாக்கியாவின் பார்வையில் செழியன்- மாலினி போட்டோஸ்- அப்போ ஜெனியின் வாழ்க்கை போச்சா..?

பாக்கியாவின் பார்வையில் செழியன் – மாலினி நெருக்கமான புகைப்படங்கள் சிக்கியுள்ளன.பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமியும் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் கணவரை இழந்தபெண் தனியாக நின்று கணவரின் பெற்றார் மற்றும் குழந்தைகளை எப்படி பார்த்து கொள்கிறார் என்பதனை கருத்தாக கொண்டமைந்துள்ளது.


அந்த வகையில் அமிர்தாவின் கணவர் மீண்டும் வந்த காரணத்தினால் எழிலின் வாழ்க்கை என்ன ஆவது? என கேள்விக்குறியாக இருக்கின்றது. அதனை முடிப்பதற்கு பாக்கியா ஒரு மாதம் கால அவகாசம் கேட்டுள்ளமையினால் அது கொஞ்சம் அமைதியாக இருக்கின்றது.

நெருக்கமான புகைப்படங்கள்

இந்த நிலையில் செழியன் – மாலினி நெருக்கம் பாக்கியாவிற்கு தெரியவந்துள்ளது. செழியனின் கைப்பேசியில் செழியன் – மாலினி நெருக்கமான புகைப்படங்கள் மற்றும் குரல் பதிவுகள் மாட்டியுள்ளது.

இவற்றை பார்த்த பாக்கியா ஜெனியின் வாழ்க்கையை நினைத்து குழப்பத்தில் உள்ளார் அன்றைய தினம் கேட்ட போது ஏதோ கூறி மழுப்பிய செழியன் இப்படியொரு சிக்கலில் மாட்டியுள்ளார். மேலும் பாக்கியா இதற்கு என்ன முடிவு எடுக்க போகிறார் என ரசிகர்கள் உட்பட அனைவரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

About tamilkilavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *