Breaking News

வீட்டுக்குள் நுழைந்த மாலினி.. கன்னம் பழுக்க வாங்கிய செழியன் – அடுத்தடுத்து வெடிக்கும் சம்பவம்!

பாக்கியாவிற்கு விஷயம் தெரிந்து வீட்டிற்கு சென்று செழியனுக்கு கன்னம் பழுக்க அறைந்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியல் கணவர் கை விட்டு சென்றாலும் தனிப் பெண்ணாக இருந்து எப்படி குடும்பத்தை பார்த்து கொள்ள வேண்டும் என்பதனை தெளிவாக காட்டியிருப்பார்கள். அந்த வகையில், இன்றைய தினம் இனியா காய்ச்சலால் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவளை பார்க்கும் ஈஸ்வரி, “ உடம்பு சரியில்லாத மகளை கூட பார்க்க டைம் இல்லையா” என பாக்யாவை திட்டுகிறார்.


இப்படியொரு பக்கம் கதை சென்றுக் கொண்டிருக்கையில் வெளியிலிருந்து உள்ளே வந்த பாக்கியா ஈஸ்வரி மற்றும் இனியாவை சமாளித்து விட்டு செழியனை தனியாக பேச அழைக்கிறார்.

எழில் அறைக்குள் சென்று கதவை தப்பால் போட்ட பாக்கியா, “இப்போ தான் மாலினியை பார்த்துவிட்டு வருகிறேன் ” என்று சொல்ல, செழியன் வழக்கம் போல் தனக்கு எதுவும் தெரியாது என்று மழுப்பலாக பதில் சொல்கிறார்.
வீட்டிற்குள் வந்த செழியன்

கோபம் பொறுக்காமல் பாக்கியா – செழியன் கன்னத்தில் பளார் பளாரென கன்னம் வெடிக்கும் அளவிற்கு அடித்துள்ளார். பின்னர் ஜெனியிடம் நடந்ததை கூறு, பின்னர் என்னிடம் பேசு அதுவரையில் என்னிடம் பேசாதே… என கண்டிப்புடன் கூறி சென்றுள்ளார். இதனை தொடர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில், மாலினி அதிரடியாக வீட்டிற்குள் வந்துள்ளார்.

பின்னர் என்ன செய்ய போகிறார் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனை பார்த்த பாக்கியலட்சுமி ரசிகர்கள் அடுத்து என்ன நடக்கும் என ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்.

இப்படியெல்லாம் டுவிஸ்ட் கொடுத்தால் இது தான் டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கும் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

About tamilkilavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *