Breaking News

Red Card: பிரதீப்புக்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்…

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான பிரதீப் நேற்றைய எபிசோடில் ரெட் கார்ட் கொடுத்து திடீரென்று வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

சக போட்டியாளர்களிடம் கூட சொல்ல விடாமல் அவரை கன்சன்ஷன் ரூமில் இருந்து அப்படியே வெளியேற்றி இருந்தனர். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்து இருப்பது பிக் பாஸ் தான்.


இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதுவரைக்கும் இந்த சீசன் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு இப்போது 7வது சீசன் வெற்றி நடை போடுகின்றது.

இந்த நிகழ்ச்சியில் மீடியா மற்றும் சின்னத்திரை, சினிமாத்துறை என பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தற்போதைய ஏழாவது சீசன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் இருந்த நிலையில் அதை தொடர்ந்து ஐந்து போட்டியாளர்கள் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டு இருந்தனர்.

பிரதீப்க்கு ரெட் கார்டு

இப்போது ஐந்து போட்டியாளர்கள் உள்ளே வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்திருக்கின்றனர். இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே வெளியேற்றப்பட்டார். கமல்ஹாசன் இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு அவர்களுடைய கருத்து கேட்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்றைய எபிசோடில், பிரதீப்புக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பிய போட்டியாளர்கள், பெரும்பாலும் அவர் மீது முன்வைத்த குற்றச்சாட்டு என்னவென்றால் அவரால் இந்த வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தான்.

அவர்களின் குற்றச்சாட்டை பரிசீலித்த கமல், பிரதீப்புக்கு ரெட் காட்டு கொடுக்க முடிவு செய்தார். இதன்காரணமாக இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதீப் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

சக போட்டியாளர்கள் கொடுத்த அடுத்த அடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக கமல்ஹாசன் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறி இருந்தார். அதோடு ஏற்கனவே கடந்த சீசனில் இந்த மாதிரி விளையாடி ஜெயித்தது போல இப்போதும் அதையே பாலோ பண்ணி ஜெயித்து விடலாம் என்று நினைத்தால் அது தவறு.

மக்கள் எப்போதும் ஒரே ரசனையில் இருக்க மாட்டார்கள் என கமல் விளக்கம் கொடுத்திருந்தார். இருப்பினும் பிரதீப் தரப்பில் எந்த கருத்தும் கேட்கப்படாதது குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிரதீப் வெளியேற்றப்பட்டது சரியான முடிவு என ஒரு தரப்பினரும் அது தவறு என ஒரு தரப்பினரும் வாதிட்டு வருகின்றனர். பிரதீபின் வெளியேற்றம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

About tamilkilavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *