Breaking News

Red Card வாங்கிய பிரதீப்பிற்கு சூட்கேஸ்வுடன் கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்றைய தினம் வெளியேற்றப்பட்ட பிரதீபிற்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றிருப்பது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.


இந்த நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது ஏழாவது சீசன் ஆரம்பமாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வெளியேறும் போட்டியாளர்கள் மீடியா மற்றும் சினிமாத்துறையில் இலகுவாக பிரபலமாகி விடுகிறார்கள்.

இந்த நிலையில் பிக்பாஸ் 7 மிக விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
பிரதீபிற்கு கொடுக்கப்பட்ட சம்பளம் இன்றைய தினம் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார் என பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பின் வாசல் வழியாக வெளியேற்றபட்டுள்ளார்.

கமல்ஹாசன் இந்த முடிவை எடுப்பதற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலுள்ள அனைத்து போட்டியாளர்களிடமும் கேட்டுள்ளார். போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் கூடி ஏகமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதீப்பிற்கு பிக்பாஸ் வீட்டில் இருப்பதற்காக ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் பேசப்பட்டது.

அந்த வகையில் பிரதீப் சூட்கேஸ்வுடன் சேர்த்து 6,80,000 கொடுக்கபட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பிரதீப் கொஞ்சம் அமைதியாக இருந்திருந்தால் டைட்டில் வின்னர் ஆகியிருக்கலாம் என அவரின் ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

About tamilkilavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *