Breaking News

அரண்மனை போல வீடு விற்பனைக்கு !!! 14.5 லட்சம் மட்டுமே

வீடியோ

மஞ்சள் கலந்த பால் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் யாவை?


மஞ்சள் கலந்த பாலில் நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு வழங்குகிறது. இது குறித்த அறிவியல் பூர்வமான பத்து நன்மைகள் இதோ… இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், நோய் மற்றும் தொற்று நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

மஞ்சள், இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை கலந்த பால் வலுவான அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன, அவை வீக்கம் மற்றும் மூட்டு வலியைக் குறைக்கலாம். மஞ்சள் கலந்த பால் நினைவாற்றலை பாதுகாக்கவும், அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோயிலிருந்து மூளையின் செயல்பாடு குறைவதைக் குறைக்கவும் உதவும்.

மஞ்சளில் உள்ள குர்குமின், மனச்சோர்வின் அறிகுறிகளை குறைக்க உதவும். மஞ்சள் கலந்த பால் இதய நோயிலிருந்து பாதுகாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன.

மஞ்சள் கலந்த பால், இரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம் மற்றும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தலாம். இலவங்கப்பட்டை, இஞ்சி மற்றும் மஞ்சள் ஆகியவை கலந்த பால் புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பை வழங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

– மஞ்சள் கலந்த பாலில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உங்கள் உடலை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கும். – மஞ்சள் கலந்த பாலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்தலாம்.

மஞ்சள் கலந்த பால் அஜீரணத்தை போக்க உதவும். சளி தொல்லையில் இருந்தும் பாதுகாக்கும். – மஞ்சள் கலந்த பால் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்திருக்கும். இது எலும்பு நோய்களின் அபாயத்தை குறைக்கின்றன.

About tamilkilavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *