Breaking News

இடுப்பு முதுகுவலி வெள்ளைமுடி இந்த தாவரத்தின் அதிசயங்கள் உங்களுக்குத் தெரியுமா என்று யோசிக்க வைக்கும்

மூக்குத்திப் பூ செடியை தெரியாதவர்கள் யாரும் கிராமங்களில் இருக்க முடியாது. இது எல்லா கிராமங்களிலும் இருக்கும் இதற்கு தாத்தப் பூ செடி, தலைப்வெட்டிப் பூ செடி, என பல பெயர்கள் உண்டு.இந்த செடியில் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.புண்களை ஆற்றும்,விஷத் தன்மையை முறிக்கும்,மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்தும்,மூட்டு வலியை மாயமாக்கும்,சளி, இருமலுக்கு மருந்தாக அமையும்


இந்த செடியானது புதர்போல் சாலை ஓரங்களில் மண்டிக் கிடக்கும். வளைந்த மற்றும் கூரிய முட்களை இருக்கும் என்பதால், இந்த செடியை கவனமுடன் பயன்படுத்த வேண்டும்.மஞ்சள், வெள்ளை, ஊதா நிறங்களில் பூக்கள் இருக்கும். காய்கள் மிளகை போன்று காணப்படும். காய்கள் விஷத்தன்மை உடையாதால் இதை சாப்பிடக் கூடாது.

இந்த குட்டிச் செடி ஏராளமான நோய்களை தீர்க்கக் கூடியது. இந்த இலைகளை எடுத்து நன்றாக கழுவி மிளகு ரசத்தில் போட்டு குடித்தால் சளி இருமல், தலை பாரம் , தலை வலி ஆகியவை குறைந்துவிடுமாம்.எதேச்சையாக உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் இரத்தம் நிற்காமல் சென்றால் அந்த இடத்தில் மூக்குத்திப் பூ இலை சாரை விட்டால் உடனடியாக இரத்தம் அதிகம் போவது நின்று விடும்.

முழங்கால் வலி, மூட்டு வலி போன்றவற்றிற்கு சிறிது நல்லெண்ணை விட்டு அதில் இலை பூ வேர் போன்றவற்றை போட்டு சிறிது வதக்கி மூட்டு வலி உள்ள இடத்தில் கட்டி விடுங்கள் வலி உடனடியாக தீர்ந்துவிடும், பெறிய அல்லது நீண்ட நாட்கள் ஆறாமல் இருக்கும் புண்கள் மீது மூக்குத்தி பூ செடியின் இலையை தேவையான அளவு பிடிங்கி சிறிது தண்ணீர் விட்டு அறைத்து உடம்பில் உள்ள. வெளி காயங்களுக்கு போட்டு வந்தால் எப்படி பட்ட புண்களாக இருந்தாலும் எளிதில் ஆறி விடும்.

இந்த அறிய வகை மூக்குத்தி பூ செடி சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடியது. இதனுடைய பூ மூக்குத்தியை போன்று இருக்கும் சர்க்கரை நோயாளிகளின் புண்களை கூட இது எளிதாக குணப்படுத்தும் தன்மை கொண்டது.அதே போல் தேமல் சொரி போன்றவற்றிக்கு இதன் இலைகளை கழுவி பின் இரண்டு கைகளாலும் கசக்கி சாற்றுடன் இலைகளை சொரி, தேமல் மீது தேய்க்க வேண்டும், அப்படி இரண்டு மூன்று நாட்கள் செய்யும் போதே தேமல் காணாமல் போய்விடும்

About tamilkilavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *