பொதுவாகவே சாம்பாருக்கு ஒரு பொடி, குழம்புக்கு ஒரு மிளகாய்த்தூள், வறுவலுக்கு ஒரு பொடி, கிரேவிக்கு ஒரு பொடி என்று விதவிதமாக மசாலா பொடிகள் சமையலறையில் இருக்கும். சில பேர் சீரகத்தூள், மிளகுத்தூள் இதையெல்லாம் கூட தனித்தனியாக சேர்த்து குழம்பு வைப்பார்கள்.
ஆனால் அந்த அவசியம் இனி கிடையாது. எல்லா வகையான மசாலா பொருட்களையும் ஒன்றாக வறுத்து போட்டு இப்படி குழம்பு மிளகாய் தூள் அரைத்து வைத்துக் கொண்டால் சைவம், அசைவம், பொரியல், வறுவல், குழம்பு, சாம்பார் என்று எல்லாவற்றிற்கும் இந்த குழம்பு மிளகாய்த்தூளை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆமாங்க, அசத்தலான ருசி தரும் மிளகாய் தூள் அரைப்பது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
அட இவ்ளோ நாள் இது தெரியாம கடைல வாங்கிட்டு இருந்தோமே….. வாருங்கள் மிளகாய் போடி எப்படி செய்வது என்பதை பாரி கீழே உள்ள வீடியோவில் பார்த்து தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்