நம்மில் நிறைய பேருக்கு இருக்கக்கூடிய பிரச்சனை முன் நெற்றியில் வழுக்கை. முன்னாடி நெற்றியில் சில பேருக்கு முடி வளர்ச்சி மிக மிக குறைவாக இருக்கும். இதற்கு, மிக மிக சுலபமான முறையில், அதிவிரைவாக, அந்த வழுக்கையில் முடி வளர செய்வதற்கான ஒரு ரெமிடியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
சிலருக்கு முடி உதிர்வால் தலை வழுக்கையாகியும் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம், தூக்கமின்மை, முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போன்றவை ஆகும். முடி உதிர்வால் ஆண்களுக்கு மட்டும் தலை வழுக்கையாவதில்லை, பெண்களுக்கும் தான்.
ஆனால் இப்பிரச்சனை ஆண்களிடம் அதிகமாக காணப்படுவதால், பல ஆண்கள் இதனாலேயே அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.ஒருவரது அழகை மேம்படுத்திக் காட்டுவதில் தலைமுடி முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் இந்த முடி உதிர்ந்து வழுக்கையானால், அது ஒருவரது அழகை எப்படி பாதிக்கும் என்பதை சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை.
ஆகவே நாங்கள் தலைமுடி உதிர்வால் மனம் உடைந்து போனவர்களுக்காக ஒருசில அற்புதமான இயற்கை வைத்தியங்களைக் கொடுத்துள்ளோம். இந்த வழிகள் புதிய முடி வளர உதவி புரிந்து, வழுக்கை பிரச்சனையில் இருந்து விடுபட உதவும். சரி, வாருங்கள் அந்த வழிகளைக் காண்போம்.