காய்கறிகள், பழங்களை காட்டிலும் பல மடங்கு நன்மைகளை தருவது இந்த கீரை மற்றும் மூலிகை வகைகள் தான். நமது முன்னோர்கள் அதிகளவில் கீரை மற்றும் மூலிகையை உணவில் சேர்த்துக் கொண்டதனால் தான் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் நாம் இந்த நவீன காலத்தில் பாஸ்ட் புட் மயக்கத்திலயே நம் வாழ்நாளை கொன்று கொண்டு இருக்கிறோம்.
ஏன் நம் பிள்ளைகளுக்கு கூட எந்தவொரு கீரையின் பெயரோ மூலிகையின் பெயரோ கூட தெரியாமல் வளர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களாகிய நமக்கு கூட சில கீரை மற்றும் மூலிகை வகைகளின் நன்மைகள் கூட தெரியாமல் வாழ்ந்து வருகிறோம். அப்படிப்பட்ட சில அற்புதமான நன்மைகளை அள்ளித் தரும் மூலிகை வகைகளைப் பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.
அம்மான் பச்சரிசி பெரும்பாலும் ஈரமாக உள்ள எல்லா இடங்களிலும் காணப்படும். மழைக் காலங்களில் தான் நன்கு வளரும். இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால் பால் கசியும். சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இவை பயன்படுத்தப்படுகிறது.
இந்த செடியை எங்கு கண்டாலும் விட்டுவிடாதீர்கள்!! கண்டிப்பாக வீட்டிற்கு எடுத்து போங்கள்! தங்கத்தைவிட இதன் மதிப்பு அதிகம்! என்ற தலைப்பில் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.