முன்பெல்லாம் கண்பார்வை கோளாறு, மூக்கு கண்ணாடி அணிய வேண்டிய நிலை எல்லாம் வயதானவர்களுக்கு தான் ஏற்படும்.
ஆனால் இப்போதெல்லாம் 5 வயது சிறுவர்கள் கூட மூக்கு கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் முன் அமர்ந்து நீண்டநேரம் அமர்ந்திருப்பது, செல்போனை நோண்டி கொண்டிருப்பது, சத்தான உணவுகளை சாப்பிடாமல் இருப்பது போன்ற பல காரணங்களால் கண்களில் பிரச்சனை ஏற்படுகின்றது.
கண்பார்வை எப்போதும் பிரகாசமாக இருக்கவும், மூக்கு கண்ணாடியில் இருந்து விடுதலை பெறவும், கண் பிரச்சனையால் ஏற்படும் ஒற்றை தலைவலியில் இருந்து தப்பிக்கவும் சில எளிய இயற்கை மருத்துவங்கள் உள்ளது.