கண்கள் தொடர்பான பிரச்சினைகள் முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே வரும். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் இளம் சிறார்கள் கூட கண் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மூக்கு கண்ணாடி அணிவதை காணமுடிகிறது.
கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் முன் அமர்ந்து நீண்டநேரம் வேலை செய்வது மட்டுமல்லாமல், மீதி நேரத்தில் செல்போனை பார்த்துக்கொண்டிருப்பதால், கண் பார்வையில் குறைபாடு ஏற்படுகிறது.
கண்ணாடி போடுவது ஸ்டைல் என்று நினைத்துக் கொள்பவர்களும் உண்டு. அதுவே நாளாக நாளாக பெரிய தலைவலியாகிவிடும். மோசமான உணவுப் பழக்கத்தாலும், நாம் சாப்பிடும் உணவில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல், கண் ஆரோக்கியம் பாதிப்படைகிறது.
அந்த வகையில் கண் பார்வை சரியாகி தூரத்தில் இருக்கும் விடயங்களை கூட தெளிவாக தெரிய சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை காண்போம்.