பாதங்களில் ஏற்படும் சிறிய பிளவுகளுக்கு பித்த வெடிப்பு என்று பெயர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும், அசுத்தம் காரணமாகவும், இந்த வெடிப்புகள் ஏற்படுகின்றன. உங்கள் குதிகால் விளிம்பைச் சுற்றியுள்ள தோல் வறண்டு தடிமனாக மாறும்போது குதிகால் விரிசல் ஏற்படலாம்.
மேலும் குதிகால் கீழ் உள்ள கொழுப்புத் திண்டின் மீது அழுத்தம் அதிகரிப்பதால் சருமம் பிளவுபடும். உடல் பருமன், செருப்பு போன்ற திறந்த ஹீல் காலணிகளை அணிவது மற்றும் குளிர்ந்த, வறண்ட சருமம் போன்ற பல காரணிகள் குதிகால் விரிசல் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கலாம்.
இதனை புறக்கணிப்பதால் ஏற்படும் அபாயங்கள். உலர்ந்த, விரிசல் அடைந்த குதிகால்களை புறக்கணிக்கணிப்பதனால் காலப்போக்கில் அது ஆழமான பிளவுகளை உருவாக்கலாம்..இது உங்கள் தொற்று அபாயத்தை பல பின்விளைவுகளை அதிகரிக்கிறது.
ஆகையால் நாம் நமது கைகள் குறித்து கவனமாக இருப்பது போல கால்கள் மற்றும் பாதங்களையும் பேணிப்பாதுகாத்தல் அவசியம். அந்தவகையில் குதிகால் வெடிப்பினை எப்படி சரி செய்யலாம் என்பதை பார்ப்போம்.