ஒரு காலக்கட்டத்தில் வயதானவர்களை மட்டும் தாக்கும் சர்க்கரை நோய் பிரச்சனை தற்போது வயது வித்தியாசமின்றி பலருக்கும் ஏற்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் மாறிவரும் வாழ்க்கை முறையும், உணவு முறையும் தான்.சரி ஹை சுகர் இருப்பவர்கள் சர்க்கரை அளவை உடனே குறைக்க என்ன சாப்பிடலாம் என பார்ப்போம்.
சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வர உங்களுக்கு ஃபைபர் மிகவும் அவசியமாகும். அதனால் ஃபைபர் நிறைந்த காய்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். காய்கறிகளில் பொதுவாக கார்போஹைட்ரேட், ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட்,டயட்டரி ஃபைபர்,கரோடினாய்ட்ஸ்,ஃபோலிக் ஆசிட்,மக்னீசியம்,விட்டமின் சி மற்றும் விட்டமின் இ ஆகியவை நிறைந்திருக்கும். இவை சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வர உதவுவதுடன் நீங்கள் சாப்பிட்ட உணவினை செரிக்க வைக்கவும் உதவிடுகிறது
இரத்த சர்க்கரை அளவை உடல் ஒழுங்குபடுத்த முடியாத ஒரு நிலை நீரிழிவாகும். இது ஒரு நாட்பட்ட நோயாக கருதப்படுகிறது. பாரம்பரியம், உடல் பருமன், மன அழுத்தம், மோசமான உணவுப் பழக்கம், மற்ற நோய்கள், அறுவை சிகிச்சை, மாத்திரை மருந்துகள் மற்றும் கிருமிகள் என்று இந்த நோய் உண்டாக பல்வேறு காரணிகள் உள்ளன. இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும் ஹார்மோன் இன்சுலின் ஆகும்.
இது கணையத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. உடல் போதுமான அளவு இன்சுலின் உற்பத்தியை செய்யாமல் இருக்கும்போது அல்லது அதன் உற்பத்தியை தடுக்கும்போது அல்லது இவை இரண்டு மாற்றங்களும் உடலில் உண்டாகும்போது ஒருவருக்கு நீரிழிவு ஏற்படுகிறது.