உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உடலில் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும். ரத்த உற்பத்தி அதிகரிக்க அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.
ஹீமோகுளோபின் அளவு வெகுவாக குறைந்தால், அது இரத்த சோகையின் அறிகுறியாக இருக்கலாம். அதன் அறிகுறிகள் மிகவும் கடுமையாக இருக்கும். ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதற்கு இரும்புச்சத்து குறைபாடு ஒரு பொதுவான காரணம் ஆகும்.
பொதுவாக நாம் ஹீமீகுளோபின் எனக்கூறுவது சிவப்பு இரத்த அணுக்களில் உள்ள புரோட்டீன் அளவாகும்.இது உடலிவுள்ள மற்றை பாகங்களிலிருந்து ஆக்ஸிஜனை செலுத்தி அவற்றிலிருந்து கார்பன் – டை- ஆக்ஸைடை உறிஞ்சி நுரையீரலுக்கு கடத்துகிறது.
இதன்படி, ஹீமீகுளோபின் அளவு குறைவு என்றால் இரத்தத்திலுள்ள சிவப்பு அனுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என அர்த்தம்.அந்த வகையில், ஹீமீகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகள் குறித்து தெரிந்து கொள்வோம்.